எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இலங்கை நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது!

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில் இன்று பிற்பகல் இலங்கை நாடாளுமன்றத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

News image
கோப்புப்படம்
Updated On :5 ஏப்ரல் 2022, 10:15 am

DIN

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில் இன்று பிற்பகல் இலங்கை நாடாளுமன்றத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயா்வு, எரிபொருள், உணவுப் பொருள்கள் பற்றாக்குறை என மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மக்களின் தொடர் போராட்டம் காரணமாக இலங்கையில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது. ஊரடங்கை மீறியும் இலங்கை அதிபா் மற்றும் பிரதமருக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருவதால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. 

இலங்கையில் மக்களின் நிலை கண்டு, பிரதமர் மகிந்த ராஜபட்சவைத் தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜிநாமா செய்த நிலையில், அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைய அதிபர் கோத்தபய ராஜபட்ச அழைப்பு விடுத்தார். அதன்படி புதிதாக 4 அமைச்சர்கள் பதவியேற்றனர். ஆனால், பதவியேற்று 24 மணி நேரத்திற்குள்ளாக நிதியமைச்சர் அலி சப்ரி ராஜிநாமா செய்தார். 

மேலும், 42 எம்.பி.க்கள் அரசுக்கு வழங்கும் தங்களுடைய ஆதரவை விலக்கிக்கொள்வதாகவும் தனித்து செயல்பட உள்ளதாகவும் கூறுவதால் அரசு பெரும்பான்மையை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்தவொரு சூழ்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் பிற்பகல் 3 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற அவைத் தலைவர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பிரதமர் மகிந்த ராஜபட்ச, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 

இதில், இலங்கையில் அதிபர் ஆட்சிக்கு அதிகாரம் அளிக்கும் நடைமுறையை கைவிட்டு பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு அதிகாரம் வழங்கும் 19 ஆவது சட்டதிருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும், அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபட்ச இருவரும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்பதும் எதிர்க்கட்சியினரின் கோரிக்கையாக இருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.