நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

நார்வே, இராக், ஆஸ்திரேலியாவில் உள்ள தூதரகங்களை மூட இலங்கை அரசு முடிவு!

நார்வே, இராக், ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள தூதரகங்களை தற்காலிகமாக மூட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. 

News image
Updated On :5 ஏப்ரல் 2022, 12:25 pm

DIN

நார்வே, இராக், ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள தூதரகங்களை தற்காலிகமாக மூட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. 

அந்நியச் செலவாணி கையிருப்பு குறைந்ததனால் இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயா்வு, எரிபொருள், உணவுப் பொருள்கள் பற்றாக்குறை என மக்கள் கடும் சிரமத்தில் உள்ளனர். 

இலங்கையில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டும் இலங்கை அதிபா் கோத்தபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபட்சவுக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்று வருவதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. 

இதனிடையே ஆளும் கட்சி அமைச்சர்கள் பதவியை ராஜிநாமா செய்தத்தாலும், எம்.பி.க்கள் ஆளும் அரசுக்கு  அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதாலும் அங்கு அரசியல் குழப்பமும் நீடித்து வருகிறது. 

அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபட்ச இருவரும் ராஜிநாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியினரின் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

பொருளாதார நெருக்கடி குறித்து ஆலோசிக்க இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சி கூட்டமும் நடைபெற்றது. 

இந்நிலையில், பொருளாதார நெருக்கடியால் நார்வே, இராக், ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள தங்களின் தூதரகங்களை தற்காலிகமாக மூட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. 

வருகிற 30 ஆம் தேதி முதல் மேற்குறிப்பிட்ட 3 நாடுகளில் உள்ள தூதரகங்கள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.