நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இலங்கையில் இன்னும் ஒரு வாரத்தில்.. : எச்சரிக்கும் சுகாதாரத் துறை

இலங்கையில் உள்ள மருத்துவமனைகள், வரும் வாரங்களில் அவசரகால சிகிச்சை அளிக்கக் கூட போதுமான மருந்து மற்றும் மருத்துவப் பொருள்கள் இல்லாமல் அவதிப்படக்கூடும் என்று தேசிய மருத்துவக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்

News image

இலங்கையில் மருந்து, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு: எச்சரிக்கும் சுகாதாரத் துறை

Updated On :8 ஏப்ரல் 2022, 8:16 am

DIN


கொழும்பு: இலங்கையில் உள்ள மருத்துவமனைகள், வரும் வாரங்களில் அவசரகால சிகிச்சை அளிக்கக் கூட போதுமான மருந்து மற்றும் மருத்துவப் பொருள்கள் இல்லாமல் அவதிப்படக்கூடும் என்று தேசிய மருத்துவக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒருவேளை, மருந்து மற்றும் மருத்துவப் பொருள்களின் விநியோகம் சீரடையாவிட்டால், பெருங்கேடு ஏற்பட்டு, அதிகளவில் உயிரிழப்புகள் நேரிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு எரிபொருள் தட்டுப்பாடும், அத்தியாவசியப் பொருள்களின் தட்டுப்பாடும் நிலவுகிறது.

இந்த நிலையில், இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு, இலங்கை மருத்துவக் கழகம் எழுதியிருக்கும் கடிதத்தில், மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இல்லாததால் ஏற்கனவே வழக்கமாக நடைபெறும் அறுவைசிகிச்சைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், உடனடியாக மருந்து மற்றும் மருத்துவ பொருள்களின் விநியோகம் சீரடையாவிட்டால், இன்னும் ஒரு சில வாரங்களில் அவசரகால சிகிச்சைகள் கூட அளிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் பெரும் அபாயம் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.