ரஷிய - உக்ரைன் போரால் உலகில் 5ல் ஒருவர் வறுமையை எதிர்கொள்ளலாம்: ஐ.நா. எச்சரிக்கை

ரஷியா - உக்ரைன் போர் காரணமாக உலகில் 5-ல் ஒருவர் வறுமையால் பாதிக்கப்படலாம் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ்
ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ்

ரஷியா - உக்ரைன் போர் காரணமாக உலகில் 5-ல் ஒருவர் வறுமையால் பாதிக்கப்படலாம் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இதுகுறித்து கூறியதாவது: 

உக்ரைனில் நடைபெறும் துயரங்களை பார்த்துக்கொண்டிருக்கிறோம். எல்லைகளுக்கு அப்பால், வளரும் நாடுகளின் மீது இந்த போர் மௌனமான தாக்குதலைத் தொடுத்துள்ளது. 5ல் ஒரு பங்குக்கு மேலாக மக்கள் வறுமையால் பாதிக்கப்படுவர். 

பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு உலகில் 170 கோடி(1.7 பில்லியன்) மக்கள் வறுமை, பசி, பட்டினியால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சமீபமாக ஏற்படாத புதியதொரு சூழலாக இது இருக்கும். 

உலகில் கோதுமை உற்பத்தியில் உக்ரைனும் ரஷியாவும் 30% உற்பத்தியைத் தருகிறது. அதேபோல பார்லியும் இந்த இரு நாட்டில்தான் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. மக்காச்சோள உற்பத்தியில் உக்ரைன் உலகளவில் 5-வது இடத்தில் இருக்கிறது. சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் 50% க்கும் மேல் உக்ரைனில் தயாரிக்கப்படுகிறது. 

வளர்ச்சி குன்றிய நாடுகளில் 45 நாடுகள் ரஷிய -உக்ரைன் கோதுமையை நம்பியே உள்ளன. போரினால் உற்பத்தியும் ஏற்றுமதியும் வெகுவாகப்  பாதிக்கப்பட்டுள்ளது. பொருள்களின் விலையும் ஏற்றம் கண்டுள்ளது. 2022 தொடக்கத்தில் இருந்து கோதுமை மற்றும் மக்காச்சோளத்தின் விலை 30% வரை அதிகரித்துள்ளது. அதுபோன்று கச்சா எண்ணெய் விலை 60%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கேஸ் சிலிண்டர் மற்றும் உரங்களின் விலையும் இரட்டிப்பாகியுள்ளது. 

பணக்காரர்கள் பணக்காரர்களாகவும், ஏழைகள் ஏழைகளாகவும் இருக்கும் நிலையை மாற்ற உலக நிதி அமைப்பில் சீர்திருத்தங்கள் வேண்டும்.

இந்தப் போரால் உலகளவில் 143 நாடுகளின் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படும். இந்த இரு நாடுகள் சர்வதேச ஜிடிபியில் 86% ஆதிக்கம் செலுத்துவதால் அவர்களின் பொருளாதார குறியீடுகள் சரிவது உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்' என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com