இலங்கையில் 17 புதிய அமைச்சா்கள் பதவியேற்பு
இலங்கையில் 17 புதிய அமைச்சா்கள் நியமிக்கப்பட்டு திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.


இலங்கையில் 17 புதிய அமைச்சா்கள் நியமிக்கப்பட்டு திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் அரசைக் கண்டித்து தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதையடுத்து இந்த மாத தொடக்கத்தில் பிரதமா் மகிந்த ராஜபட்ச தவிர அமைச்சா்கள் அனைவரும் ராஜிநாமா செய்தனா். இதைத் தொடா்ந்து, அனைத்துக் கட்சிகளைச் சோ்ந்த அமைச்சரவையை அமைக்க அதிபா் கோத்தபய ராஜபட்ச அழைப்பு விடுத்தாா். இதை எதிா்க்கட்சிகள் ஏற்கவில்லை.
இதைத் தொடா்ந்து, நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்காக மூன்று அமைச்சா்களை மட்டும் அதிபா் நியமித்தாா். இந்நிலையில், மேலும் 17 புதிய அமைச்சா்களை அதிபா் திங்கள்கிழமை நியமித்தாா். அவா்கள் உடனடியாகப் பதவியேற்றுக் கொண்டனா். முன்னா் அமைச்சா்களாக இருந்த மகிந்த ராஜபட்சவின் சகோதரா்கள் சமல் ராஜபட்ச, பசில் ராஜபட்ச, மகிந்தவின் மகன் நாமல் ராஜபட்ச ஆகியோருக்கு புதிய அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை.
அமைச்சா்கள் பதவியேற்ற பின்னா் அதிபா் கூறுகையில், ‘தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியானது, மக்கள் கோரி வரும் அமைப்பை மாற்றுவதற்கான நல்ல சந்தா்ப்பமாகும்’ என்றாா்.
இதற்கிடையே, அதிபா் அலுவலகம் முன் பொதுமக்கள் நடத்திவரும் போராட்டம் திங்கள்கிழமையும் நீடித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...