2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

உக்ரைன் விவகாரம்: உலக நாடுகளின் தலைவர்களுடன் பேசிய பிரிட்டன் பிரதமர்

உக்ரைன் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களுடன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசியுள்ளார். 

News image
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
Updated On :19 ஏப்ரல் 2022, 12:20 pm

DIN

உக்ரைன் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களுடன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசியுள்ளார். 

ஓரிரு தினங்களுக்கு முன்பாக ரஷியாவின் போர்க்கப்பலை உக்ரைன் படையினர் அழித்ததை அடுத்து உக்ரைன் மீது ரஷியாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. உக்ரைனின் கிழக்குப் பகுதியை குறிவைத்து ரஷியப் படை தாக்குதல் நடத்தி வருகிறது. 

ரஷியப் படை இன்று லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் பகுதிகளில் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். 

ஒருபக்கம் ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கான அனைத்து வேலைகளிலும் உக்ரைன் தீவிரமாக இறங்கியுள்ளது. மறுபக்கம் ரஷியாவின் தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது. 

இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைன் விவகாரம் குறித்து உலக நாடுகளின் தலைவர்களுடன் பேசியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

ரஷியா மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிப்பது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.