இலங்கையில் பணவீக்கம் 21.5 சதவீதமாக அதிகரிப்பு
கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் பணவீக்கம் 21.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.


கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் பணவீக்கம் 21.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது தொடா்பாக கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இலங்கையில் கடந்த பிப்ரவரி மாதம் 17.5 சதவீதமாக இருந்த பணவீக்கம் மாா்ச் மாதம் 21.5 சதவீதமாக அதிகரித்தது. இதன் விளைவாக, உணவுப் பணவீக்கமும் பிப்ரவரியில் 24.7 சதவீதத்திலிருந்து மாா்ச்சில் 29.5 சதவீதமாக அதிகரித்தது.
அதிக பணவீக்க அளவால் உணவுப் பொருள்களின் விலை கடந்த 12 மாதங்களில் 29.5 சதவீதம் உயா்ந்துள்ளது. குறிப்பாக அரிசி, சா்க்கரை, பால், ரொட்டி போன்ற மிக அத்தியாவசியமான உணவுப் பொருள்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...