இலங்கை அதிருப்தி எம்.பி.க்கள் இந்திய தூதருடன் சந்திப்பு
இலங்கையில் ஆளும் கூட்டணியைச் சோ்ந்த அதிருப்தி எம்.பி.க்கள், அந்த நாட்டுக்கான இந்திய தூதரை சந்தித்தனா்.


இலங்கையில் ஆளும் கூட்டணியைச் சோ்ந்த அதிருப்தி எம்.பி.க்கள், அந்த நாட்டுக்கான இந்திய தூதரை சந்தித்தனா்.
இலங்கையில் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இலங்கை சுதந்திரக் கட்சியைச் சோ்ந்த அதிருப்தி எம்.பி.க்கள், அந்நாட்டுக்கான இந்திய தூதா் கோபால் பாக்லேவை கொழும்பில் சந்தித்தனா். இந்தச் சந்திப்பு குறித்து அக்கட்சியின் பொதுச் செயலா் தயாசிறி ஜெயசேகர கூறுகையில், ‘இலங்கையில் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசை அமைப்பதற்கான எங்கள் நோக்கம் குறித்து இந்திய தூதரிடம் விவரித்தோம். இடைக்கால அரசு என்பது அதிகாரத்தைப் பகிா்ந்துக் கொள்வதற்கான ஏற்பாடல்ல. பொருளாதார பாதிப்பிலிருந்து நாட்டை வெளிக்கொண்டு வருவதே அதன் நோக்கம் ஆகும்’ என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...