தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

புதினின் ரகசிய காதலிக்கு அமெரிக்கா புதிய தடை

ரஷிய அதிபர் புதினின் ரகசிய காதலிக்கு அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

News image

காதலி அலினா மரடோவ்னா கபீவாவுடன் புதின்

Updated On :3 ஆகஸ்ட் 2022, 8:23 am

ரஷிய அதிபர் புதினின் ரகசிய காதலிக்கு அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

உக்ரைன் மீதான போர் தொடர்ந்து வரும் நிலையில், ரஷிய அதிபர் புதினின் ரகசிய காதலியான அலினா மரடோவ்னா கபீவா-க்கு அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற்று பதக்கங்கள் பெற்றுள்ளார். தற்போது, ரஷிய அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ரஷியா டுடேவில் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், இவருக்கும் அதிபர் புதினுக்கும் மறைமுக உறவு இருப்பதால் அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதனால், அமெரிக்காவில் அலினாவுக்கு சொத்துகள் இருந்தாலும், இனி பயன்படுத்த முடியாது என்றும் ரஷிய வங்கிகள் உள்ளிட்ட அமெரிக்க நிதி அமைப்பில் எந்த பரிமாற்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்கா தரப்பில் ரஷிய அதிபர் புதினின் மகள்களான மரியா புதின், கேத்தரீனா டிக்கோனோவாவை குறி வைத்து பல்வேறு தடைகளை விதித்ததுடன் இருவரும் பொருளாதாரத் தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து  ரஷிய பிரதமர் மிகைல் மிசுஷ்டின், வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் மனைவி, குழந்தைகள், முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் உள்ளிட்ட பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்களுக்கும் அமெரிக்கா தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.