தவெக ஆட்சியில் பணவீக்கம், விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடம்: மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு!காஞ்சிபுரத்தில் இந்தியாவிலேயே சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையம்! ஜனவரியில் திறந்து வைக்கிறார் முதல்வர்!ஆந்திரம் சென்றார் முதல்வர் விஜய்! உற்சாக வரவேற்பு!தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்!ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசுமின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்விதிமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்பு

இலங்கை: போராட்டக்காரர்களுக்கு அரசு எச்சரிக்கை

இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  மக்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Published On :

இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  மக்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், கோத்தபய ராஜபட்ச மாலத்தீவுக்கு தப்பிச் சென்றாா். பின்னா், அங்கிருந்து சிங்கப்பூா் சென்ற அவா் தனது அதிபா் பதவியை ராஜிநாமா செய்தாா்.

இதையடுத்து, கடந்த ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற வாக்கெடுப்பு மூலம் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தோ்வு செய்யப்பட்டாா்.

மேலும், நாடாளுமன்றத்தில் நேற்று அதிபராக முதல்முறை உரையாற்றிய ரணில், இக்கட்டான சூழலில் மருந்துகளை வழங்கிய இந்தியாவிற்கு நன்றி தெரிவித்ததுடன் எதிர்கால திட்டம் குறித்தும் பேசினார்.

இந்நிலையில், தற்போது இலங்கை அதிபர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள் காலி முகத்திடலில் உள்ள அனைத்து சட்டவிரோத கூடாரங்களையும் முகாம்களையும் நாளை(வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் அகற்றி அப்பகுதியை விட்டு முழுமையாக வெளியேற வேண்டும் என்றும் கலைந்து செல்லாதவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நாட்டு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.