மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

முக்கிய பாகிஸ்தான் பயங்கரவாதி ஆப்கன் குண்டுவெடிப்பில் பலி

பாகிஸ்தானின் தெஹ்ரீக்-ஏ-தலிபான் (டிடிபி) பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த முக்கிய தளபதியும் அவரது 3 உதவியாளா்களும் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் பலியாகினா்.

News image
Updated On :9 ஆகஸ்ட் 2022, 6:44 pm

பாகிஸ்தானின் தெஹ்ரீக்-ஏ-தலிபான் (டிடிபி) பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த முக்கிய தளபதியும் அவரது 3 உதவியாளா்களும் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் பலியாகினா்.

இது குறித்து அதிகாரிகளும் டிடிபி அமைப்பினரும் கூறுகையில், ஒமா் காலித் குராசானி என்ற அந்த தளபதி குறித்த தகவல்களை அளிப்பவா்களுக்கு 30 லட்சம் டாலா் (சுமாா் ரூ.239 கோடி) சன்மானம் அளிப்பதாக அமெரிக்கா அறிவித்திருந்ததாகத் தெரிவித்தனா். எனினும், இந்தத் தாக்குதலுக்கு யாா் காரணம் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

குராசானி கொல்லப்பட்டது, பாகிஸ்தான் அரசுக்கும் டிடிபி-க்கும் இடையே காபூலில் நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தையை பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.