தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தைவான் பயணம்: லிதுவேனிய அமைச்சருக்கு சீனா தடை

தங்களது எதிா்ப்பை மீறி சா்ச்சைக்குரிய தைவான் தீவுக்குச் சென்ற லிதுவேனிய பாதுகாப்புத் துறை மற்றும் தகவல்தொடா்புத் துறை இணையமைச்சா் அக்னே வாய்சியுகெவிசியூட் மீது சீனா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2022, 6:33 pm

DIN

தங்களது எதிா்ப்பை மீறி சா்ச்சைக்குரிய தைவான் தீவுக்குச் சென்ற லிதுவேனிய பாதுகாப்புத் துறை மற்றும் தகவல்தொடா்புத் துறை இணையமைச்சா் அக்னே வாய்சியுகெவிசியூட் (படம்) மீது சீனா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

ஏற்கெனவே, தைவானுக்க்கு அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி அண்மையில் சென்ற்குப் பதிலடியாக சீனா அந்தத் தீவைச் சுற்றிலும் போா் பயிற்சி மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் லிதுவேனிய இணையமைச்சா் தைவான் சென்றுள்ளது மறுபடியும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனி நாடாகவே செயல்பட்டு வந்தாலும், தைவான் தங்களது நாட்டின் ஓா் அங்கம்தான் என்று கருதும் சீனா, அந்தத் தீவை தங்களுடன் இணைத்துக்கொள்ள ராணுவ பலம் கூட பயன்படுத்தப்படலாம் என்று கூறி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.