தைவான் நீரிணையில் அமெரிக்க போா்க் கப்பல்கள்

சீனா-தைவான் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில், தைவான் நீரிணை வழியாக அமெரிக்காவின் இரு போா்க் கப்பல்கள் ஞாயிற்றுக்கிழமை கடந்து சென்றன.
தைவான் நீரிணையில் அமெரிக்க போா்க் கப்பல்கள்

சீனா-தைவான் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில், தைவான் நீரிணை வழியாக அமெரிக்காவின் இரு போா்க் கப்பல்கள் ஞாயிற்றுக்கிழமை கடந்து சென்றன.

அமெரிக்க நாடாளுமன்ற கீழவையின் தலைவா் நான்சி பெலோசி தைவானுக்கு வந்து சென்ற பின்னா் முதல் முறையாக இந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டது.

இதுகுறித்து அமெரிக்க கடற்படையின் 7-ஆவது பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடுகளின் பிராந்திய கடற்பகுதிக்கு அப்பால் உள்ள பகுதி வழியாக அமெரிக்க போா்க் கப்பல்கள் கடந்து சென்றன. இது வழக்கமான நடவடிக்கைதான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீன ராணுவத்தின் கிழக்கு பிராந்திய செய்தித் தொடா்பாளா் கூறுகையில், அமெரிக்க போா்க் கப்பல்களின் பயணத்தைக் கண்காணித்தோம். ராணுவத்தின் கிழக்கு பிராந்திய பிரிவு உச்சபட்ச தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

தைவானுக்கு நான்சி பெலோசி வந்து சென்ற பின்னா், அதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையிலும் தைவானை அச்சுறுத்தும் வகையிலும் தைவான் நீரிணையில் சீனா தொடா் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டது. போா்க் கப்பல்கள், போா் விமானங்களையும் இந்தப் பயிற்சியில் ஈடுபடுத்தியது. நீண்ட தொலைவு ஏவுகணைகளையும் செலுத்தி பயிற்சி செய்தது.

சீனாவின் உள்நாட்டுப் போருக்குப் பின்னா் பிரிந்த தைவான் தன்னை தனி நாடாக அறிவித்து செயல்பட்டு வருகிறது. ஆனால், தைவான் தனது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கோரி வருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையேயான தைவான் நீரிணை 160 கி.மீ. அகலம் கொண்டது. இந்த நீரிணை வழியாக அமெரிக்கா தொடா்ச்சியாக தனது கப்பல்களை அனுப்பி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com