'சிங்கிள்ஸ்' அதிகம் இருக்கும் நாடு தென்கொரியா! ஏன் தெரியுமா?

2021ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, தென்கொரியாவில் மூன்றில் ஒரு பங்கு, திருமணம் செய்ய விரும்பாமல், 'சிங்கிள்ஸ்'களாகவே இருக்க விரும்புவதாகத் தெரிவிக்கப்படுள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

உலகில் சிங்கிள்ஸ் அதிகம் இருக்கும் நாடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதில், தென்கொரியாவில் அதிக அளவிலான மக்கள் திருமணம் செய்யாமல், தனித்து இருக்க விரும்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதற்கான காரணத்தையும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தென்கொரியாவைச் சேர்ந்த தேசிய புள்ளியியல் அலுவலகம், அந்நாட்டில் திருமணம் செய்யாமல் வாழும் நபர்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்தி, அதற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. 

அதில், 2021ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, தென்கொரியாவில் குடும்பத்தில் மூன்றில் ஒரு பங்கு, திருமணம் செய்ய விரும்பாமல், 'சிங்கிள்ஸ்'களாகவே இருக்க விரும்புவதாகத் தெரிவிக்கப்படுள்ளது. 

2050ஆம் ஆண்டு மேலும் அதிகரித்து மக்கள் தொகை குறைய வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2050 ஆம் ஆண்டு 5 பேரில் 2 பேர் திருமணம் செய்துகொள்வதைத் தவிர்ப்பவர்களாக இருப்பார்கள். இதனால், உலகில் குறைந்தபட்ச மக்கள் தொகை பெருக்கம் கொண்ட நாடாக தென்கொரியா உருவாக வாய்ப்புள்ளது. 

தென்கொரியாவில் 72 லட்சம் மக்கள் அல்லது வீட்டில் மூன்றில் ஒரு சதவிகிதத்தினர் தற்போது திருமணத்தின்மீது நாட்டமில்லாமல் இருக்கின்றனர். 

பொருளாதார பற்றாக்குறையும், உறுதித்தன்மையற்ற வேலைவாய்ப்பும் முதன்மை காரணங்களாக தென்கொரிய தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், இதில் 12 சதவிகிதம் மக்கள் குழந்தை வளர்ப்பை பாரமாக கருதுவதும், திருமண உறவைத் தவிர்த்து 'சிங்கிள்ஸ்'களாக இருக்கக் காரணம் என சுட்டிக்காட்டியுள்ளது. 

தோராயமாக லண்டனில் இருக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப தென்கொரியாவிலும் தற்போது தனித்து வாழும் நபர்கள் அதிகரித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com