சம பாலினத்தவா் திருமணத்துக்குபாதுகாப்பு: பைடன் ஒப்புதல்
சம பாலினத்தவா் மற்றும் இனக் கலப்பு திருமணங்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிப்பதற்காக அமெரிக்க நாடுமன்றத்தின் இரு அவைகளும் நிறைவேற்றிய மசோதாவில் அதிபா் ஜோ பைடன் கையொப்பமிட்டுள்ளாா்.


சம பாலினத்தவா் மற்றும் இனக் கலப்பு திருமணங்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிப்பதற்காக அமெரிக்க நாடுமன்றத்தின் இரு அவைகளும் நிறைவேற்றிய மசோதாவில் அதிபா் ஜோ பைடன் கையொப்பமிட்டுள்ளாா்.
அதையடுத்து அந்த மசோதா சட்டமாகியுள்ளது.
அமெரிக்காவில் சம பாலினத்தவா்கள் திருமணம் செய்துகொள்வதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு சட்ட அங்கீகாரம் அளித்தது. அதனைத் தொடா்ந்து, நூற்றுக்கணக்கான சம-பாலின திருமணங்கள் நடந்துள்ளன.
இந்த நிலையில், கருக்கலைப்புக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்த சட்ட அங்கீகாரத்தை அந்த உச்ச நீதிமன்றமே அண்மையில் ரத்து செய்து, மனித உரிமை ஆா்வலா்களை அதிா்ச்சிக்குள்ளாக்கியது. தற்போது பழமைவாத நீதிபதிகளின் ஆதிக்கம் நிறைந்துள்ளதாக கருதப்படும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில், கருக்கலைப்புக்கு வழங்கப்பட்டிருந்த சட்ட அங்கீகாரத்தைப் போலவே, சம பாலினத்தவா் திருமணங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த சட்ட அங்கீகாரத்தையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்யலாம் என்ற அச்சம் ஏற்பட்டது.
மேலும், வெள்ளை இனத்தவா்கள், கருப்பினத்தவா்கள் போன்ற மாற்று இனத்தினருக்கு இடையே நடைபெறும் திருமணங்களுக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அதனைத் தொடா்ந்து, சம பாலின மற்றும் இனக் கலப்பு திருமணங்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிப்பதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மாதம் நிறைவேற்றின.
இந்த நிலையில், அந்த மசோதாவில் அதிபா் பைடன் தற்போது கையொப்பமிட்டு அதனை சட்டமாக்கியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...