
கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் சூழலில் சீனாவிற்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு சொந்தநாட்டு மக்களை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
சீனாவில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்நாட்டில் இந்த வாரத்தின் ஒரேநாளில் 3.7 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | உக்ரைனின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ரஷியா திருட முடியாது: கீவ் மேயர்
இந்நிலையில் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு சீனாவிற்கு பயணம் செல்லும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை தூதரக பணிகள் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சீனாவில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் மருத்துவ வசதிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்றும், மக்கள் தங்களது பயணத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
சீனாவிற்கு பயணம் செய்பவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும், தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு அமெரிக்கா நேரடியாக எந்தவித மருத்துவ உதவியையும் வழங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.