/

குவைத்தில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கும் கனமழை

குவைத்தில் கடுமையான இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால், அங்கு வெப்பநிலை குறைந்துள்ளது.

News image
Updated On :30 டிசம்பர் 2022, 10:48 am

DIN

குவைத்: குவைத்தில் கடுமையான இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால், அங்கு வெப்பநிலை குறைந்துள்ளது.

கனமழை காரணமாக, சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

குவைத் நகரம் முழுவதும் கனமழை கொட்டி, வெள்ளக்காடான புகைப்படங்களும் விடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

ஏற்கனவே குவைத் வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், இடி மின்னலுடன் திடீரென வானிலை மாற்றம் ஏற்பட்டு கனமழை கொட்டியதால் பல பகுதிகளில் வெள்ளக்காடாக மாறியது. கனமழையுடன் சூறைக்காற்றும் வீசியதால், பல இடங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பல சாலைகள் போக்குவரத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்புகளையும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டு வந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.