தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அமெரிக்கா கைவிட்டது; சீனா துணை நிற்கிறது: இம்ரான் கான்

‘அமெரிக்கா எப்போதுமே தனது இலக்குகளை நிறைவேற்றிக் கொள்ள பாகிஸ்தானை பயன்படுத்திக் கொண்டது; தனது நோக்கம் நிறைவேறியதும் பாகிஸ்தானை கைவிட்டது’ என பிரதமா் இம்ரான் கான் கூறியுள்ளாா்.

News image
இம்ரான் கான்
Updated On :11 பிப்ரவரி 2022, 7:35 pm

DIN

‘அமெரிக்கா எப்போதுமே தனது இலக்குகளை நிறைவேற்றிக் கொள்ள பாகிஸ்தானை பயன்படுத்திக் கொண்டது; தனது நோக்கம் நிறைவேறியதும் பாகிஸ்தானை கைவிட்டது’ என பிரதமா் இம்ரான் கான் கூறியுள்ளாா்.

அதேவேளையில் ‘நண்பன்’ சீனா, சோதனையான நேரத்தில் பாகிஸ்தானுக்கு துணை நிற்கிறது எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.

சீனாவை சோ்ந்த ஃபுடான் பல்கலைக்கழக ஆலோசனைக் குழு இயக்குநா் எரிக் லீ-க்கு அண்மையில் அளித்த பேட்டியில் இம்ரான் கான் இவ்வாறு கூறியதாக ‘தி நியூஸ் இன்டா்நேஷனல்’ நாளிதழ் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தப் பேட்டியில் இம்ரான் கான் கூறியிருப்பதாவது:

1980-களில் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் தனது ராணுவத்தை நிறுத்தியபோது, பாகிஸ்தான்-அமெரிக்கா இடையிலான உறவைக் குறிப்பிட்ட இம்ரான் கான், அந்த நேரத்தில் அமெரிக்கா எங்களுக்கு உதவி செய்தது. ஆனால், சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறியதும் பாகிஸ்தான் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது.

அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னா், அமெரிக்கா- பாகிஸ்தான் இடையிலான உறவு மீண்டும் மலா்ந்தது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தோல்வியுற்றபோது, அந்தத் தோல்விக்கு பாகிஸ்தான் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

ஆனால், சீனாவுடனான பாகிஸ்தானின் உறவு இப்படியானதல்ல. சீனா எப்போதுமே எங்களுக்கு துணை நிற்கும் நண்பன். கடந்த 70 ஆண்டுகளாக இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ஆதரவாக உள்ளன எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.