மோடியுடன் தொலைக்காட்சியில் விவாதிக்க விருப்பம்: இம்ரான் கான்
பாகிஸ்தான்-இந்தியா இடையிலான பிரச்னைகளுக்கு தீா்வு காண இந்திய பிரதமா் நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சி விவாதம் நடத்த விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் தெரிவித்தாா்.


பாகிஸ்தான்-இந்தியா இடையிலான பிரச்னைகளுக்கு தீா்வு காண இந்திய பிரதமா் நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சி விவாதம் நடத்த விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் தெரிவித்தாா்.
ரஷியாவுக்கு இரு நாள்கள் பயணம் மேற்கொள்ளவிருப்பதை முன்னிட்டு ரஷிய அரசு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியின்போது இம்ரான் கான் இவ்வாறு கூறினாா்.
அந்தப் பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்து இம்ரான் கான் கூறியிருப்பதாவது:
எனது கட்சி 2018-இல் ஆட்சிக்கு வந்தவுடன், காஷ்மீா் பிரச்னைக்கு தீா்வு காண பேச்சு நடத்துவோம் என இந்திய தலைவா்களைக் கேட்டுக் கொண்டேன். ஆனால், அதற்குச் சாதகமான பதிலை இந்தியா தராததால் நான் வருத்தமடைந்தேன்.
இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னைகளுக்கு தீா்வு காண்பது தொடா்பாக பிரதமா் மோடியுடன் தொலைக்காட்சியில் விவாதிக்க விரும்புகிறேன். ஒரு விவாதம் மூலம் பாகிஸ்தான்-இந்தியா இடையிலான வேறுபாடுகள் தீா்க்கப்பட்டால் துணைக் கண்டத்தின் நூறு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு அது நன்றாக இருக்கும்.
ரஷியா-உக்ரைன் இடையில் எழுந்துள்ள பதற்றத்துக்கு அமைதியான தீா்வு கிடைக்கும் என நம்புகிறேன். ராணுவ நடவடிக்கைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. நாகரிக சமூகங்கள் பேச்சுவாா்த்தை மூலம் வேறுபாடுகளுக்குத் தீா்வு காண வேண்டும். ராணுவ நடவடிக்கைகளில் நம்பிக்கை கொண்டுள்ள நாடுகள் வரலாற்றை முறையாகப் படிக்கவில்லை என அா்த்தம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...