போரிட விரும்பும் கைதிகள் விடுதலை செய்யப்படுவர்: ஸெலென்ஸ்கி அறிவிப்பு

உக்ரைனில் போரிட விரும்பும் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என அந்நாட்டின் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். 
போரிட விரும்பும் கைதிகள் விடுதலை செய்யப்படுவர்: ஸெலென்ஸ்கி அறிவிப்பு

உக்ரைனில் போரிட விரும்பும் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என அந்நாட்டின் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் கடந்த வியாழக்கிழமை தொடங்கி இன்று 5 ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது. ரஷிய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்களில் கடுமையான தாக்குதலைகளை நடத்தி வருகின்றன. இதனால் உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்து வருகின்றனர். 

இதனிடையே போரை நிறுத்துவது தொடர்பாக ரஷியா- உக்ரைன் இடையே இன்று பிற்பகல் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. 

முன்னதாக காணொலியில் பேசிய அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, 

'ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதால் உக்ரைன் வீரர்கள் தங்கள் ஆயுதங்களை கீழிறக்க வேண்டும்.

மேலும், உக்ரைனில் போர் தொடரும்பட்சத்தில் ராணுவ அனுபவம் பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படுவர். மற்ற கைதிகளும் போரிட விரும்பும் பட்சத்தில் விடுதலை செய்யப்படுவார்கள்' என்று கூறியுள்ளார். 

இதுவரை 4,500 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், 'இந்த பேச்சுவார்த்தை மீது பெரிதாக நம்பிக்கை இல்லை எனினும் போரை நிறுத்த நான் எதுவும் முயற்சிக்கவில்லை என்று என்னுடைய மக்கள் சந்தேகப்பட்டுவிடக் கூடாது என்பதால் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com