பெலாரஸ்: 7 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு
பெலாரஸில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 7 லட்சத்தைக் கடந்தது.


பெலாரஸில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 7 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 1,311 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,00,421-ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 16 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 5,594-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பெலாரஸில் சனிக்கிழமை நிலவரப்படி 6,93,860 கரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 967 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...