தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

அமெரிக்கா: கரோனாவால் ஒரே நாளில் 10 லட்சம் பேர் பாதிப்பு

அமெரிக்காவில் முன் எப்போது இல்லாத அளவிற்கு ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. 

News image

அமெரிக்கா: கரோனாவால் ஒரே நாளில் 10 லட்சம் பேர் பாதிப்பு

Updated On :4 ஜனவரி 2022, 6:12 am

அமெரிக்காவில் முன் எப்போது இல்லாத அளவிற்கு ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியது. 

உலகம் முழுவதும் கரோனா தாக்கம் குறைய ஆரம்பித்த நிலையில் ஒமைக்ரான் தொற்று பரவத் தொடங்கியதும் மீண்டும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உச்சத்தை அடைந்து வருகிறது.

தற்போது, அமெரிக்காவில் கடந்த 7 நாள்களின் சராசரி கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 4.13 லட்சத்தைத் தாண்டியிருந்த நிலையில் நேற்று(ஜன.3) ஒரே நாளில் கரோனாவால் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாக ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதனால், 100 அமெரிக்கர்களில் ஒருவருக்கு தொற்று என்கிற அடிப்படையில் கரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.60 கோடியாகவும் பலியானவர்கள் 8.26 லட்சமாகவும் உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.