டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

உலகளவில் கரோனா பாதிப்பு 33.94 கோடி; பலி 5.58 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33.94 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 5.58 லட்சத்தை கடந்துள்ளது.  

News image
Updated On :20 ஜனவரி 2022, 5:18 am

DIN

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33.94 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 5.58 லட்சத்தை கடந்துள்ளது.  

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தி வந்ததாலும் தொற்று பாதிப்பு அதிகரித்தே வருகின்றன. 

இதனிடையே கடந்த ஆண்டு இறுதியில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்ற உருமாறிய கரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவத்தொடங்கி உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்நிலையில், உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 33,94,86,288-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 55,83,850 போ் உயிரிழந்துள்ளனர். 

இதையும் படிக்க | ‘புதிதாக 1.8 கோடி பேருக்கு கரோனா’

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 27,31,98,664 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 6,07,03,774 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 96,816 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 69,808,350    ஆகவும், பலி எண்ணிக்கை 8,80,976 ஆகவும் உயர்ந்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,82,18,773-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,87,719 பேர் பலியாகியுள்ளனர்.

தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,34,20,861 ஆகவும் பலிகளைப் பொருத்தவரை 6,21,927 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இங்கிலாந்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,55,06,750-ஆகவும், பலிகளைப் பொருத்தவரை 1,52,872 ஆக உள்ளது.

பிரான்ஸில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,29,34,982 ஆகவும், பலிகளைப் பொருத்தவரை 1,27,869 ஆக உள்ளது.

ரஷ்யாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,08,99,411 ஆகவும், பலிகளைப் பொருத்தவரை 3,23,376 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.