புதிய வகை கரோனா...மூன்றில் ஒருவர் மரணம்...வூஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் விகிதம் அதிகரித்ததன் விளைவாகவே ஒமைக்ரான் குறைவான இறப்பு விகிதத்தையும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்கான தேவையையும் குறைந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவந்தாலும், முந்தைய அலையை காட்டிலும் தீவிரத்தன்மை குறைவாகவே உள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளான பெரும்பாலான நபர்கள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்கான தேவை குறைவாகவே காணப்படுகிறது.

இந்நிலையில், மிகவும் அபாயகரமான நியோகோவ் என்ற வைரஸ் தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வைரஸ் அதிக இறப்புகளை ஏற்படுத்தும் அதே சமயத்தில் வேகமாக பரவும் தன்மையும் கொண்டுள்ளது என சீனாவில் உள்ள வூஹான் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து ரஷ்ய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் வெளியிட்ட செய்தியில், "கடந்த 2012-15 காலக்கட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் கண்டறியப்பட்ட மெர்ஸ்-கோவ் என்ற வைரசுடன் இந்த நியோகோவுக்கு தொடர்பு இருக்கிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நியோகோவ் குறித்து டிஏஎஸ்எஸ் என்ற ரஷ்ய நிறுவனம் வெளியிட்ட செய்தியில், "தென்னாப்பிரிக்காவில் வௌவால்களில் கண்டறியப்பட்ட நியோகோவ் மாறுபாடு, சார்ஸ் கோவ்-2 வைரஸ் ஏற்படுத்தும் அறிகுறிகளையும் விளைவுகளையும் கொண்ட மெர்ஸ் காய்ச்சலை போலவே உள்ளது என சீனாவில் உள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல, நியோகோவ் அதிக இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது என்றும் இதனால் பாதிக்கப்படும் மூன்றில் ஒருவர் இறக்கின்றனர் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து ரஷ்ய கிருமியியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "சீன ஆராய்ச்சியாளர்கள், 
நியோகோவ் கரோனா வைரஸ் குறித்து தரவுகள் சேகரித்து வைத்திருப்பதை நம் ஆய்வு மையம் அறிந்திருக்கிறது. இந்த நேரத்தில், நம்முடைய பிரச்னை என்பது மனிதர்களிடையே தீவிரமாக பரவும் திறன் கொண்ட புதிய கரோனா வைரஸ் அல்ல" எனக் கூறியுள்ளனர்.

ஒமைக்ரான் வைரசும் தென்னாப்பிரிக்காவில்தான் முதல்முறையாக கண்டறியப்பட்டது. தொடக்கத்தில், அதை கவலை அளிக்கும் வைரஸாக உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டாலும், பின்னர், அது வேகமாக பரவுகிறதே தவிர மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டனர்.

தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் விகிதம் அதிகரித்ததன் விளைவாகவே ஒமைக்ரான் குறைவான இறப்பு விகிதத்தையும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்கான தேவையையும் குறைந்தது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.
  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com