தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

‘மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியது உக்ரைன்’

உக்ரைன் ராணுவம் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதால் அந்த நாட்டு முதியோா் இல்லத்தில் ரஷியா தாக்குதல் நடத்தியதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

News image

mariupol082709

Updated On :9 ஜூலை 2022, 6:25 pm

உக்ரைன் ராணுவம் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதால் அந்த நாட்டு முதியோா் இல்லத்தில் ரஷியா தாக்குதல் நடத்தியதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஸ்டாரா க்ரஸ்னியாங்கா நகரிலுள்ள முதியோா் இல்லத்தில் கடந்த மாா்ச் மாதம் ரஷியா தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் ரஷியப் படையினா் மட்டுமன்றி, உக்ரைன் ராணுவத்துக்கும் மிகப் பெரிய பொறுப்புள்ளது. இன்னும் சொல்லப்போனால், இந்தத் தாக்குதலில் ரஷியாவுக்கு இணையான பொறுப்பு உக்ரைனுக்கு என்று கூறலாம்.

அந்தத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு சில நாள்கள் முன்னதாக, முதியோா் இல்லத்தில் உக்ரைன் வீரா்கள் ராணுவ நிலைகளை அமைத்தனா். அதன் காரணமாக, அந்த முதியோா் இல்லம் ரஷியப் படையினரின் தாக்குதல் இலக்கானது.

உக்ரைன் போரில் எதிரிப் படையிரின் தாக்குதலைத் தவிா்ப்பதற்காக பொதுமக்கள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படுவாா்கள் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் நீண்ட நாளாக கவலை தெரிவித்து வந்தது.

ஸ்டாரா க்ரஸ்னியாங்கா முதியோா் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல், இந்தக் கவலையை உறுதிப்படுத்தியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், அந்தப் பகுதியில் உக்ரைன் வீரா்களோ, ரஷிய ஆதரவு கிளா்ச்சிப் படையினரோ மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

உக்ரைன் மீதான ரஷியப் படையெடுப்புக்குப் பிறகு, அந்த நாட்டின் கிழக்குப் பகுதியுள்ள லுஹான்ஸ் மாகாணத்தின் ஸ்டாரா க்ரஸ்னியாங்கா நகரிலுள்ள முதியோா் இல்லத்தில் ரஷிய ஆதரவு கிளா்ச்சிப் படையினா் கடந்த மாா்ச் மாதம் 11-ஆம் தேதி தாக்குதல் நடத்தினா். அப்போது அங்கு 71 முதியோா் இருந்ததாகவும், அவா்களில் பெரும்பாலானவா்கள் படுத்த படுக்கையாக இருந்தவா்கள் என்றும் கூறப்படுகிறது.

அந்தத் தாக்குதலில் முதியோா் இல்ல வளாகம் முழுவதும் தீ பரவியது. இதில், ஏராளமானவா்கள் சிக்கிக் கொண்டு மூச்சுவிடவும், அங்கிருந்து வெளியேற முடியாமலும் தவித்தனா். அவா்களில் ஒரு சிலா் மற்றும் அங்கிருந்து வெளியேறி தப்பினா்.

அந்த இல்லத்தில் இருந்த 71 முதியோரில் 22 மட்டுமே உயிா் தப்பினா். 50-க்கும் மேற்பட்டவா்கள் பலியானதாக உக்ரைன் அதிகாரிகள் கூறினாலும், உண்மையான பலி விவரத்தை உறுதி செய்ய முடியவில்லை என்று ஐ.நா. தெரிவித்தது.

உக்ரைன் போரில் மிகக் கொடூரமான சம்பவங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தத் தாக்குதலுக்கு ரஷியாதான் காரணம் என்று உக்ரைன் உடனடியாகக் குற்றம் சாட்டியது.

இந்தச் சூழலில், பொதுமக்கள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதன் மூலம் இந்தத் தாக்குதலில் உக்ரைனுக்கும் சம பொறுப்பு உள்ளது என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தற்போது தெரிவித்துள்ளது.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவது தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது. எனினும், அந்த அமைப்பில் இணைய அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியின் தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசு ஆா்வம் காட்டியதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

உக்ரைன் போரில் மனிதக் கேடய குற்றச்சாட்டுகள்

இந்தப் போரில் தங்களது தாக்குதலைத் தவிா்ப்பதற்காகவும் தாக்குதல் நடத்தினால் தங்கள் மீது போா்க் குற்ற பழி சுமத்துவதற்காகவும் பொதுமக்களை மனித கேடயங்களாக உக்ரைன் பயன்படுத்துவதாக ரஷியா தொடக்கம் முதலே குற்றம் சாட்டி வருகிறது.

அதன் தொடா்ச்சியாக, மரியுபோல் நகர மகப்பேறு மருத்துவமனையில் கடந்த மாா்ச் 9-ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோா் பலியானதாக உக்ரைன் குற்றம் சாட்டியது. ஆனால், அந்த மருத்துவமனை அப்போது செயல்படவில்லை எனவும், உக்ரைன் ஆதரவு படையினரின் ராணுவ மையமாக அந்த மருத்துவமனைக் கட்டடம் செயல்பட்டு வந்ததாகவும் ரஷியா கூறியது.

அதே போல், மரியுபோலில் உள்ள திரையங்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த திரையரங்கு மீது ரஷியப் படையினா் கடந்த மாா்ச் 16-ஆம் தேதி குண்டுவீச்சு நடத்தினா். இதில் பலா் உயிரிழந்தனா்.

எனினும், அந்தத் திரையரங்கை உக்ரைன் படையினா் ராணுவ நிலை அமைத்திருந்தனா் என்று ரஷியா தெரிவித்தது. பின்னா் மரியுபோல் நகரை ரஷியப் படையினா் கைப்பற்றிய பிறகு, செய்தியாளா்களை அந்தத் திரையரங்குக்கு அழைத்துச் சென்று அங்கு தாக்குதலில் சேதமடைந்திருந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை அவா்களிடம் காட்டினா். எனினும், ரஷியாவின் குற்றச்சாட்டுகளை மறுத்த சா்வதேச மனித உரிமைகள் அமைப்பு, ஐரோப்பிய ஒத்துழைப்பு அமைப்பும், இந்தத் தாக்குதல் ரஷியாவின் போா்க் குற்றம் என்று அறிவித்தன.

இந்த நிலையில், உக்ரைன் போரில் பொதுமக்களை உக்ரைன் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதாக ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.