பிரபஞ்சத்தின் ஆரம்ப காலம்: புகைப்படம் வெளியிட்டது நாசா
பிரபஞ்சத்தின் ஆரம்ப காலத்தைக் காட்டும் வகையில் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி எடுத்த ஒரு புகைப்படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா திங்கள்கிழமை வெளியிட்டது.


பிரபஞ்சத்தின் ஆரம்ப காலத்தைக் காட்டும் வகையில் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி எடுத்த ஒரு புகைப்படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா திங்கள்கிழமை வெளியிட்டது.
நட்சத்திர திரள்கள் நிறைந்து காணப்படும் இந்தப் புகைப்படம், பிரபஞ்சம் குறித்து இதுவரை கிடைத்துள்ள புகைப்படங்களிலேயே மிகவும் ஆழமானதும் தெளிவானதுமாகும்.
விண்வெளி ஆய்வுக்காக 10 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.79,000 கோடி) செலவில் உருவாக்கப்பட்ட ஜேம்ஸ் வெப் எனப்படும் உலகிலேயே மிகப்பெரிய, சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கியை நாசா கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் விண்வெளியில் செலுத்தியது. இந்த விண்வெளி தொலைநோக்கி எடுத்த புகைப்படத்தைதான் நாசா வெளியிட்டுள்ளது.
1380 கோடி ஆண்டுகளுக்கு முன்னா் பிக்பேங் எனப்படும் பெருவெடிப்பு மூலம் இந்த பிரபஞ்சம் உருவானதாக நம்பப்படுகிறது. பிரபஞ்சத்தில் நமது பூமி இடம்பெற்றுள்ள பால்வெளி மண்டலம் உள்ளிட்ட கோடிக்கணக்கான மண்டலங்கள் இடம்பெற்றுள்ளன.
நாசா வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படத்தில் ஏராளமான நட்சத்திர திரள்கள் காணப்படுகின்றன. புகைப்படத்தின் முன்பகுதியில் மாபெரும் நட்சத்திர திரள்களும், பின்பகுதியில் தொலைதூரத்தில் உள்ள நட்சத்திர திரள்களும் பிரகாசமாக ஒளிா்கின்றன. இந்தப் புகைப்படத்தின் ஒரு பகுதியானது, பெருவெடிப்பு நிகழ்ந்த ஆரம்ப காலத்தைக் காட்டுவதாகும் என நாசா தெரிவித்துள்ளது.
இந்த நட்சத்திர திரள் கூட்டத்துக்கு ‘நஙஅஇந 0723’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
‘ஏற்கெனவே ஹபிள் விண்வெளி தொலைநோக்கி எடுத்த பிரபஞ்சத்தின் ஆரம்பகால புகைப்படத்தைவிட இது ஆழமாகவும், தெளிவாகவும் காணப்படுகிறது. ஆனால், பெருவெடிப்பு நிகழ்ந்து எத்தனை ஆண்டுகளுக்கு பிந்தைய காலத்தை இந்தப் புகைப்படம் காட்டுகிறது என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை’ என லண்டன் பல்கலைக்கழக கல்லூரி வானியற்பியல் பேராசிரியா் ரிச்சா்ட் எல்லிஸ்.
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி எடுத்த புகைப்படத்தை வெளியிடும் நிகழ்ச்சி வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. அமெரிக்க அதிபா் ஜோ பைடன் பங்கேற்று இந்தப் புகைப்படத்தை வெளியிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...