பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பிரிட்டனின் புதிய பிரதமர் யார்? செப்டம்பர் - 5 அறிவிப்பு

பிரிட்டனின் புதிய பிரதமர் யார் என்பதை வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி அறிவிக்க உள்ளனர்.

News image
பிரிட்டன் நாடாளுமன்றம்
Updated On :12 ஜூலை 2022, 6:03 am

DIN

பிரிட்டனின் புதிய பிரதமர்  வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி தேர்ந்தெடுக்கபட உள்ளார்.

பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் தனது பிரதமா் பதவியையும் ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சித் தலைவா் பதவியையும் கடந்த வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா்.  கட்சியின் புதிய தலைவராகத் தோ்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் பதவியேற்பாா்.

அதன்படி, கட்சித் தலைவா் பதவிக்கான போட்டியில் பங்கேற்கவிருப்பதாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக், அட்டா்னி ஜெனரல் சூவெல்லா பிரேவா்மன் மற்றும் சுகாதார மற்றும் சமூக நலக் குழு துணைத் தலைவா் ஜெரிமி ஹன்ட், வெளிவிவகாரங்களுக்கான சிறப்புக் குழு தலைவராகப் பொறுப்பு வகித்து வரும் டாம் டுகென்தாட், இராக்கை பூா்விகமாகக் கொண்ட தற்போதைய நிதியமைச்சா் நாதிம் ஸஹாவி, நைஜீரிய வம்சாவளியைச் சோ்ந்த மதம் மற்றும் சமூக நலத் துறை அமைச்சா் கெமி பேடனாக், போக்குவரத்துத் துறை இணையமைச்சா் கிரான்ட் ஷாப்ஸ், வா்த்தகக் துறை அமைச்சா் பென்னி மாா்டன்ட், பாகிஸ்தானைப் பூா்விகமாகக் கொண்ட முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் சஜித் ஜாவித் வெளியுறவுத் துறை அமைச்சா் லிஸ் டிரஸ் (46), வெளியுறவுத் துறை இணையமைச்சா் ரஹ்மான் சிஸ்தி ஆகிய 11 போ் உள்ளனர்.

மேலும், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த உள்துறை அமைச்சா் பிரீதி படேலும் இப்போட்டியில் இணைவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. பாரம்பரியமாக குறைவான வரிவிதிப்பு நடைமுறைக்கு கன்சா்வேட்டிவ் கட்சி ஆதரவளித்து வருகிறது. 

ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சித் தலைவா் தோ்தலில் இரண்டுக்கு மேற்பட்டோா் போட்டியிட்டால் இரு கட்டங்களாகத் தோ்தல் நடைபெறும்.

முதல்கட்டமாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் பல சுற்றுகளாக வாக்களித்து இறுதிச் சுற்றில் போட்டியிடும் இருவரைத் தோ்ந்தெடுப்பா். அதன்பின்னா் கட்சியின் அடிப்படை உறுப்பினா்கள் வாக்களித்து வெற்றியாளரைத் தோ்வு செய்வா். அவரே பிரதமராக நியமிக்கப்படுவாா்.

இந்நிலையில், வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி அடுத்த பிரிட்டன் பிரதமருக்கான வாக்களிப்பு நடைபெறும் என்றும் அன்றே புதிய பிரதமர் அறிக்கப்படுவார் என்றும் தேர்தல் அமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.