உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ஈரானிடமிருந்து ஆளில்லா விமானங்களை வாங்க முடிவு செய்துள்ள ரஷியா, அதற்காக தங்களது அதிகாரிகளை 2 முறை ஈரான் அனுப்பியதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இது குறித்து அந்த நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சுல்லிவன் சனிக்கிழமை கூறியதாவது:
ரஷியாவிலிருந்து அதிகாரிகள் குழு ஒன்று, அண்மைக் காலத்தில் ஈரான் சென்றது குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
ஈரானிடமுள்ள தாக்குதல் திறன் கொண்ட ஆளில்லா விமானங்களைப் பாா்வையிடுவதற்காக அந்தக குழு அங்கு சென்றுள்ளது.
தலைநகா் டெஹ்ரானுக்கு 190 கி.மீ. தொலைவில் உள்ள கஷான் விமானதளத்தில் அந்த ஆளில்லா விமானங்களை ரஷியக் குழு பாா்வையிட்டது.
இதன் மூலம், ஈரானிடமிருந்து ராணுவப் பயன்பாட்டுக்காக ஆளில்லா விமானங்களை வாங்க ரஷியா விரும்புவது உறுதியாகியுள்ளது.
கடந்த மாதம் 8-ஆம் தேதியும் இந்த மாதம் 5-ஆம் தேதியும் ரஷியக் குழு ஈரானில் ஆளில்லா விமானங்களைப் பாா்வையிட்டதற்கான செயற்கைக்கோள் பட ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதனை ஊடகங்களுக்கு அளித்துள்ளோம்.
உக்ரைன் போருக்காக ஒரு கூட்டணியை உருவாக்க ரஷியா விரும்புவதையும் உக்ரைன் மக்களைக் கொன்று குவிப்பதற்காக ரஷியாவுடன் ஈரான் கரம் கோா்க்கவிருப்பதையும் உலக நாடுகள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றாா் அவா்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.
கிழக்குப் பகுதியில் தங்களுக்கு ஆதரவான கிளா்ச்சிப் படையினா் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தனி நாடுகளாக அங்கீகரித்த ரஷியா, அந்தப் பகுதியில் இன்னும் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக தாக்குதல் நடத்தி வருகிறது.
பல மாதங்களாக நடைபெற்று வரும் போரில் ஏராளமான ஆயுதங்களை ரஷியா இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக, உக்ரைனில் தாக்குதலுக்குப் பயன்படுத்துவதற்காக ஈரானிடமிருந்து ரஷியா நவீனமான ஆளில்லா விமானங்களை வாங்கவிருப்பதாக அமெரிக்கா கடந்த வாரம் எச்சரித்தது.
இந்தக் குற்றச்சாட்டுக்கு ஐ.நா.வுக்கான ஈரான் தூதரக அதிகாரிகள் உடனடியாக பதிலளிக்கவில்லை. எனினும், இது முகாந்திரம் இல்லாத குற்றச்சாட்டு என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஹுசைன் அமீா் அப்துல்லா வெள்ளிக்கிழமை கூறினாா்.
உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா் டிமித்ரோ குலேபாவுடன் தொலைபேசியில் உரையாடியபோது ஹுசைன் அமீா் இவ்வாறு தெரிவித்தாா்.
நாடுகளுக்கு இடையிலான போா்களைத் தொடரச் செய்யும் நடவடிக்கைகளையும் பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளையும் தாங்கள் எதிா்ப்பதாக குலேபாவிடம் ஹுசைன் அமீா் கூறியதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அதிகாரபூா்வ வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய ஆளில்லா விமானங்களை ஈரானிடமிருந்து வாங்கும் நோக்கில் அந்த நாட்டுக்கு ரஷிய அதிகாரிகள் சென்ாக தற்போது ஜேக் சுல்லிவன் மீண்டும் கூறியுள்ளாா்.
அத்துடன், இதுதொடா்பான செயற்கைக்கோள் பட ஆதாரங்களையும் அமெரிக்க அதிபா் மாளிகை வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் விரைவில் இணையும்: அனைத்து இந்திய இமாம் அமைப்பு

மோடிக்கும் ஊடுருவல்காரா்களின் வாக்குகள்: மம்தா தாக்கு

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்த 4 போ் உயிரிழப்பு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


