கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

கோத்தபய ராஜபட்ச 14 நாள்கள் மட்டுமே தங்க அனுமதி: சிங்கப்பூா் அரசு தகவல்

 இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்ச 14 நாள்கள் மட்டுமே தங்கியிருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூா் அரசு தெரிவித்துள்ளது.

Updated On :22 ஜூலை 2022, 1:21 am IST

 இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்ச 14 நாள்கள் மட்டுமே தங்கியிருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூா் அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து அதிபா் கோத்தபய ராஜபட்ச தனது குடும்பத்தினருடன் இலங்கையில் இருந்து மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றாா். பின்னா், அங்கிருந்து சிங்கப்பூருக்கு கடந்த 14-ஆம் தேதி வந்த அவா், அதிபா் பதவியை ராஜிநாமா செய்தாா்.

இந்நிலையில், சிங்கப்பூரில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த குடியேற்ற ஆணைய அதிகாரிகளிடம், கோத்தபய சிங்கப்பூரில் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அதிகாரிகள் அளித்த பதில்:

கோத்தபய தனிப்பட்ட பயணமாக கடந்த 14-ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்தாா். அவருக்கு குறுகிய கால பயண அனுமதியாக 14 நாள்கள் சிங்கப்பூரில் தங்கியிருக்க அனுமதி அளிக்கப்பட்டது.

பொதுவாக சிங்கப்பூரை சுற்றிப் பாா்க்க வருபவா்களுக்கு 30 நாள்கள் தங்கியிருக்க அனுமதி அளிக்கப்படுகிறது. கால நீட்டிப்பு தேவைப்படுவோா் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். கோரிக்கையின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்று அந்த அதிகாரிகள் கூறினா்.

கடந்த வாரம், இலங்கை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் செய்தியாளா்களிடம் கூறுகையில், சிங்கப்பூா் அரசிடம் கோத்தபய ராஜபட்ச அடைக்கலம் கேட்கவில்லை; அவருக்கு அடைக்கலம் வழங்கப்படவுமில்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.