2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

'புதின் நலமாக இருக்கிறார்; வதந்திகளை நம்ப வேண்டாம்' - கிரெம்ளின்

ரஷிய அதிபர் புதின் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ரஷியாவின் கிரெம்ளின் தகவல் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :21 ஜூலை 2022, 12:28 pm

DIN

ரஷிய அதிபர் புதின் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ரஷியாவின் கிரெம்ளின் தகவல் தெரிவித்துள்ளது. 

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் மாதங்களைக் கடந்து தொடர்ந்து வருகிறது. உக்ரைனை முழுவதுமாக கைப்பற்றும் முயற்சியில் ரஷியா தீவிரமடைந்து வருகிறது. உக்ரைனும் ரஷியாவுக்கு எதிராக தொடர்ந்து போரிட்டு வருகிறது. 

இதனிடையே ரஷிய அதிபர் விளாதிமீா் புதினுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. 

இந்நிலையில் ரஷியாவின் கிரெம்ளின் மாளிகை இன்று வெளியிட்டுள்ள தகவலில், ரஷிய அதிபர் புதின் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. 

அதுபோல, கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், 'கடந்த சில மாதங்களாக அதிபரின் உடல்நலம் குறித்து மேற்கு நாடுகளில் ஊகங்கள் இருந்து வருகின்றன. அந்த தகவல்கள் எல்லாம் உண்மையில்லை' என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.