போராட்டக்காரா்கள் மீது தாக்குதல்: மகிந்த ராஜபட்சவுக்கு சம்மன் ஒத்திவைப்பு
இலங்கையில் அரசுக்கு எதிராக கடந்த மாதம் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது


இலங்கையில் அரசுக்கு எதிராக கடந்த மாதம் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடா்பாக, முன்னாள் பிரதமா் மகிந்த ராஜபட்சவுக்கு அனுப்பிய சம்மனை அந்த நாட்டு மனித உரிமைகள் ஆணையம் ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொழும்பு மற்றும் பிற நகரங்களில் கடந்த மாதம் நடைபெற்ற போராட்டத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 9 போ் பலியானது தொடா்பாக புதன்கிழமை நேரில் வந்து விளக்கமளிக்குமாறு மகிந்த ராஜபட்சவுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
எனினும், அந்தச் சம்பவங்கள் தொடா்பாக அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் சிறைத் துறை அதிகாரிகளிடமிருந்து இன்னும் முழுமையாக வாக்குமூலம் பெறப்படவில்லை.
எனவே, மகிந்த ராஜபட்சவை மனித உரிமைகள் ஆணையம் நேரில் அழைத்து விளக்கம் கேட்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதையடுத்து, போலீஸாா் மற்றும் சிறைத் துறை அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலம் பெறும்வரை மகிந்த ராஜபட்சவுக்கான சம்மனை நிறுத்திவைக்க மனித உரிமைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...