47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

உக்ரைனுக்கு அதி நவீன ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா முடிவு

ரஷியாவை எதிர்க்க உக்ரைனுக்கு அதிநவீன ஏவுகணைகளை வழங்க அமெரிக்க முடிவு செய்துள்ளது.

News image
Updated On :1 ஜூன் 2022, 7:20 am

DIN

ரஷியாவை எதிர்க்க உக்ரைனுக்கு அதிநவீன ஏவுகணைகளை வழங்க அமெரிக்க முடிவு செய்துள்ளது.

உக்ரைனின் மீதான ரஷியாவின் தாக்குதல் நூறு நாள்களை நெருங்க உள்ள நிலையின் போர் காரணமாக கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

மேலும், கிழக்கு உக்ரைனில் உள்ள சியெவெரோடொனட்ஸ்க் நகரம் நாட்டின் உற்பத்திமையமாகத் திகழ்ந்து வருகிறது. இதன் அருகேயுள்ள லிசிசன்ஸ்க் நகரமும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த இரு நகரங்களையும் கைப்பற்றும் முயற்சியில் ரஷியப் படையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

கடந்த  ஞாயிற்றுக்கிழமை அந்நகரில் வீசப்பட்ட குண்டுவீச்சில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் லெக்ரக் ஹிம்ஹால்ஃப் பலியானர். இதையடுத்து, உக்ரைனுக்கு பிரான்ஸ் அரசு தாக்குதல் குறித்த விசராணைக்கு  அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில், ரஷியாவின் தாக்குதல்களை எதிர்க்க உக்ரைனுக்கு அமெரிக்கா 700 மில்லியன் டாலர்(ரூ.5000 கோடி) மதிப்பிலான ஆயுதங்களுடன்  80 கி.மீ தொலைவு வரை இலக்கை துல்லியமாகத் தாக்கக் கூடிய ஹிமர்ஸ்(himars) போன்ற அதி நவீன ஏவுகணைகளை அனுப்ப முடிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.