உக்ரைனுக்கு ஆயுதங்கள் தேவை: ஸெலென்ஸ்கி

ரஷியாவின் தாக்குதலைச் சமாளிக்க ஆயுதங்கள் அதிக அளவில் தேவைப்படுவதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி
உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி

ரஷியாவின் தாக்குதலைச் சமாளிக்க ஆயுதங்கள் அதிக அளவில் தேவைப்படுவதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் மீதான ரஷியாவின் தாக்குதல் நூறு நாள்களை நிறைவு செய்துள்ள நிலையில் போர் காரணமாக கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

மேலும், கிழக்கு உக்ரைனில் உள்ள சியெவெரோடொனட்ஸ்க் நகரம் நாட்டின் உற்பத்திமையமாகத் திகழ்ந்து வருகிறது. இதன் அருகேயுள்ள லிசிசன்ஸ்க் நகரமும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த இரு நகரங்களையும் கைப்பற்றும் முயற்சியில் ரஷியப் படையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், போரைச் சமாளிக்க உக்ரைனுக்கு ஆயுதங்கள் தேவைப்படுவதாகவும், நட்பு நாடுகள் கொடுத்து உதவ வேண்டும் எனவும் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வாரம் ரஷியாவின் தாக்குதல்களை எதிர்க்க உக்ரைனுக்கு அமெரிக்கா 700 மில்லியன் டாலர்(ரூ.5400 கோடி) மதிப்பிலான ஆயுதங்களுடன்  80 கி.மீ தொலைவு வரை இலக்கை துல்லியமாகத் தாக்கக் கூடிய ஹிமர்ஸ்(himars) போன்ற அதி நவீன ஏவுகணைகளை அனுப்ப முடிவு செய்தது

முன்னதாக, கானொலி மூலம் பேசிய உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி “கிட்டத்தட்ட முழு ரஷிய ராணுவத்திற்கு எதிராக நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும்.  அனைத்து ரஷிய ராணுவ அமைப்புகளும் ஈடுபட்டுள்ள இந்த ஆக்கிரமிப்பில் உக்ரைனின்  20 சதவீத நிலப்பரப்பை ரஷியப்படையினர் ஆக்கிரமித்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com