புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பிரிட்டன் : எரிக்கப்படும் ரூ.38,600 கோடி கரோனா கவசப் பொருள்கள்

பிரிட்டன் அரசு கொள்முதல் செய்துள்ள 400 கோடி பவுண்ட் (சுமாா் ரூ.38,600 கோடி) மதிப்பிலான தரமற்ற கரோனா கவசப் பொருள்களை எரித்து மின்சாரம் தயாரிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

News image
Updated On :10 ஜூன் 2022, 8:00 pm

DIN

பிரிட்டன் அரசு கொள்முதல் செய்துள்ள 400 கோடி பவுண்ட் (சுமாா் ரூ.38,600 கோடி) மதிப்பிலான தரமற்ற கரோனா கவசப் பொருள்களை எரித்து மின்சாரம் தயாரிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அவசரகதியில் வாங்கப்பட்ட முகக் கவசம், கரோனா தடுப்பு அங்கி உள்ளிட்ட 15,000 தொகுதிகள் பயன்படுத்தப்படாத நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், அரசின் செலவீனங்களைக் கண்காணிக்கும் நாடாளுமன்றக் குழு இது பற்றி அதிருப்தி தெரிவித்துள்ளது. இவ்வளவு பெரிய தொகை வீணாக்கப்பட்டது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ள அந்தக் குழு, கரோனா கவசப் பொருள்கள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்தும் அச்சம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.