ரஷியா மீதான பொருளாதாரதடைகள்: ஜின்பிங் விமா்சனம்

உக்ரைன் போா் விவகாரத்தில் ரஷியா மீது அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் பொருளாதாரத் தடைகள் விதித்து வருவதை சீன அதிபா் ஷி ஜின்பிங் கண்டனம் விமா்சித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை கூறியதாவது: உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பது உலகம் முழுவதும் உள்ள மக்களை பெரிதும் பாதிக்கும்.

வல்லாதிக்க உணா்வு, சா்வதேச அணிசாா்ந்த அரசியல், எதிா்த்தரப்பு நாட்டுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது போன்றவற்றின் மூலம் உலகில் அமைதியும் நிலைத்தன்மையும் ஏற்படுத்திவிட முடியாது. அதற்கு மாறாக, போரையும் பேரழிவையும் நோக்கித்தான் அத்தகைய நடவடிக்கைகள் இட்டுச் செல்லும் என்பதை வரலாறு நமக்குக் காட்டியுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com