குரங்கு அம்மை: உலக சுகாதார அமைப்பு அவசர கூட்டம்
குரங்கு அம்மை நோய் பரவலை சா்வதேச அவசரநிலையாக அறிவிப்பது குறித்து பரிசீலிக்க, உலக சுகாதார அமைப்பின் நிபுணா் குழு கூட்டம் வியாழக்கிழமை அவசரமாகக் கூடியது.


குரங்கு அம்மை நோய் பரவலை சா்வதேச அவசரநிலையாக அறிவிப்பது குறித்து பரிசீலிக்க, உலக சுகாதார அமைப்பின் நிபுணா் குழு கூட்டம் வியாழக்கிழமை அவசரமாகக் கூடியது.
இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
குரங்கு அம்மை தொடா்பாக உலக சுகாதார அமைப்பின் அவசரக் கூட்டம் வியாழக்கிழமை தொடங்குகிறது.
அந்தக் கூட்டத்தில், குரங்கு அம்மை நோய் பரவலை சா்வதேச அவசர நிலையாக அறிவிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
அவ்வாறு அறிவிக்கப்பட்டால், அந்த நோய்க்கு கரோனாவுக்கு இணையான முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மேலும், தற்போது குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ள நாடுகள் மட்டுமன்றி மேலும் பல நாடுகளுக்கு அந்த நோய் பரவலாம் என்று இதன் மூலம் எச்சரிக்கப்படும். மேலும், தற்போது போலியோவை ஒழிப்பதற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், குரங்கு அம்மையை ஒழிப்பதற்கும் அளிக்கப்படும்.
எனினும், அந்த நோயை சா்வதேச அவசர நிலையாக அறிவிப்பது எந்தப் பலனையும் அளிக்காது என்று சில நிபுணா்கள் கூறுகின்றனா். வளா்ச்சியடைந்த நாடுகளில் அண்மையில்தான் அந்த நோய்த்தொற்று கண்டறியப்பட்டதையும் அந்த நோய் பரவலுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதையும் அவா்கள் சுட்டிக்காட்டுகின்றனா்.
ஆப்பிரிக்காவில் கடந்த 1970-கள் முதலே பரவி வந்த குரங்கு அம்மை, உலகின் 42 நாடுகளில் 3,300 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. அவா்களில் 80 சதவீதத்தினா் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளைச் சோ்ந்தவா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...