ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உக்ரைனிலிருந்து ஒரு வாரத்தில் 31 விமானங்களில் 6,300 இந்தியர்களை மீட்கத் திட்டம்

ஒரு வாரத்தில் உக்ரைனில் இருந்து 31 விமானங்களில் 6,300 இந்தியர்களை அழைத்துவர திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :2 மார்ச் 2022, 8:20 am

DIN

ஒரு வாரத்தில் உக்ரைனில் இருந்து 31 விமானங்களில் 6,300 இந்தியர்களை அழைத்துவர திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 7-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்து வருகின்றனர். அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்கும் பணியிலும் அந்தந்த நாடுகள் களமிறங்கியுள்ளன. 

அந்தவகையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் போலாந்து, ரோமானியா,  ஹங்கேரி, ஸ்லோவேக்கியா ஆகிய நாடுகளில் 24*7 கட்டுப்பாட்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மத்திய அமைச்சர்கள் ஹர்தீப்சிங் புரி, ஜோதிராதித்திய  சிந்தியா, கிரெண் ரிஜிஜு, வி.கே. சிங் ஆகியோர் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

தற்போது உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் 'ஆப்ரேஷன் கங்கா' திட்டத்தில் ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் விமானங்களுடன் இந்திய விமானப்படை விமானங்களும் இயக்கப்படுகின்றன. 

இந்நிலையில் அடுத்த ஒரு சில தினங்களில் 31 விமானங்களில் சுமார் 6,300 இந்தியர்களை மீட்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

மார்ச் 2 ஆம் தேதி வரை 21 விமானங்கள் இந்தியர்களை அழைத்து வந்துள்ளன. இந்திய விமானப்படை விமானங்கள் புச்சாரெஸ்ட் பகுதிக்கு செல்கின்றன. 

மார்ச் 2 முதல் மார்ச் 8 ஆம் தேதிக்குள் 6,300 இந்தியர்களை மீட்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.