கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

போரில் 6,000 ரஷிய வீரர்கள் பலி: உக்ரைன் அதிபர்

உக்ரைன் நடத்திய தாக்குதில் கடந்த 6 நாள்களில் 6,000 ரஷிய ராணுவ வீரர்கள் பலியானதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.

News image
உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி
Updated On :2 மார்ச் 2022, 7:59 am

DIN

உக்ரைன் நடத்திய தாக்குதில் கடந்த 6 நாள்களில் 6,000 ரஷிய ராணுவ வீரர்கள் பலியானதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.

உக்ரைனில் 7-வது நாளாக ரஷிய ராணுவப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ், கார்கீவ் போன்ற முக்கிய நகரங்களில் குடியிருப்புப் பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்திய ரஷிய ராணுவம் சில இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

நேட்டோ படையில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த பிப். 24ஆம் தேதி முதல் ரஷிய ராணுவம் உக்ரைனின் பல்வேறு எல்லைப் பகுதிகள் வழியாக ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

மேலும், தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில் உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான கார்கிவ்வில் ரஷியப் படைகள் குண்டு வீச்சுகள் மூலம் பயங்கரத் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும் அப்பகுதியை முழுமையாகக் கைப்பற்ற  ரஷிய ராணுவத்தினர் முயன்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக கெர்சன் நகரை முழுமையாகக் கைப்பற்றியதாக ரஷிய ராணுவம் அறிவித்தது.

இந்நிலையில், கடந்த 6 நாள்களில் உக்ரைனின் தாக்குதலில் 6,000 ரஷிய வீரர்கள் பலியானதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.