ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

உக்ரைனுடன் இன்றிரவு 2-ஆம் கட்ட பேச்சுக்கு தயார்: ரஷியா

உக்ரைனுடன் இன்றிரவு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த தயார் என ரஷிய தரப்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 மார்ச் 2022, 9:52 am

DIN

உக்ரைனுடன் இன்றிரவு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த தயார் என ரஷிய தரப்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷிய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து 7-வது நாளாக ரஷியாவின் முப்படைகளும் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

நேற்று காலைமுதல் தீவிர தாக்குதலை நடத்தி வரும் ரஷியப் படைகள் வேகமாக முன்னேறி வருகின்றது. குறிப்பாக, காவல்துறை அலுவலகங்கள், தொலைத் தொடர்பு கோபுரங்கள், பாதுகாப்பு அமைச்சக கட்டடங்கள், அரசு மருத்துவமனைகள் என அரசின் கட்டடங்களை ஏவுகணை மூலம் தாக்குகின்றனர்.

இந்நிலையில், இன்றிரவு உக்ரைன் அரசுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயராக இருப்பதாக ரஷிய தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பெலாரஸ் நாட்டில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட முதல்கட்ட பேச்சு வார்த்தையில் இரு நாட்டிற்கும் உடன்பாடு எட்டாதது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.