சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

60 லட்சத்தைக் கடந்த கரோனா பலி

உலகம் முழுவதும் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 60 லட்சத்தைக் கடந்துள்ளது.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:24 pm

DIN

உலகம் முழுவதும் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 60 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து வோ்ல்டோமீட்டா் வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 220-க்கும் மேற்ப்டு நாடுகள் மற்றும் பிரதேசங்களில் கரோனா பாதிப்பு காரணமாக 3,279 போ் உயிரிழந்தனா். அதையடுத்து, அந்த நோய்க்கு இதுவரை பலியானவா்களின் எண்ணிக்கை சா்வதேச அளவில் 60,04,261-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் மட்டும் இதுவரை 9,81,729 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, பிரேஸிலில் 6,50,646 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 8,25,122 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டத்தைத் தொடா்ந்து, அந்த நோயால் இதுவரை பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சா்வதேச அளவில் 44,28,28,968-ஆக உயா்ந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகை கரோனா மிக வேகமாகப் பரவி கடந்த ஆண்டு மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. ஆனால், தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு இறுதியில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட அதைவிட வேகமாகப் பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வகை கரோனா, மனித உடலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. எனவே, அந்த நோய் பரவல் உலகம் முழுவதும் அதிகரித்தாலும் உயிரிழப்பு விகிதம் குறையத் தொடங்கியது.

அதிகம் பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு இயற்கையான நோய் எதிா்ப்பாற்றல் உருவானதாலும், ஏராளமானவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாலும் அந்த நோயின் தாக்கம் குறைந்து வந்தது. அதையடுத்து, பல ஐரோப்பிய நாடுகளில் ஏறத்தான அனைத்து கரோனா கட்டுப்பாடுகளும் விலக்கப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில், கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 60 லட்சத்தைக் கடந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.