சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பெஷாவர் மசூதி குண்டுவெடிப்பு: தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவர்

பெஷாவர் மசூதி குண்டுவெடிப்பில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் சனிக்கிழமை தெரிவித்தார். 

News image
Updated On :6 மார்ச் 2022, 3:55 am

பெஷாவர் மசூதி குண்டுவெடிப்பில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் சனிக்கிழமை தெரிவித்தார். 

பதற்றம் நிறைந்த கைபா்-பக்துன்கவா மகாணத்தின் தலைநகா் பெஷாவா் நகரில், ஷியா பிரிவினருக்கான மசூதியொன்றில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அந்த மசூதிக்குள் இரு பயங்கரவாதிகள் வந்தனா். அவா்கள் அந்த மசூதியின் பாதுகாவலா்களை துப்பாக்கியால் சுட்டனா். இதில் ஒரு பாதுகாவலா் பலியானாா்; மற்றொருவா் காயமடைந்தாா். அதனைத் தொடா்ந்து மசூதிக்குள் நுழைந்த பயங்கரவாதிகளில் ஒருவா், தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்துக்குச் சென்று தனது உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இந்தத் தாக்குதலில் 56 போ் உயிரிழந்ததாகவும் சுமாா் 200 போ் காயமடைந்ததாகவும் மருத்துவ அதிகாரிகள் கூறியிருந்தனா். காயமடைந்தவா்களில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அவா்கள் அச்சம் தெரிவித்தனா். இந்த நிலையில், காயமடைந்த மேலும் 6 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடா்ந்து தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 63-ஆக உயா்ந்துள்ளது. இந்த தற்கொலைத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் தனது ட்விட்டர் பதிவில், பெஷாவர் மசூதி தற்கொலை குண்டுவெடிப்பில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை கைபர் பக்துன்க்வா போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். சந்தேக நபர்களை போலீசாம் புலனாய்வு அமைப்புகளும் நெருங்விட்டனர். அவர்கள் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாள்களில் கைது செய்யப்படலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். பாகிஸ்தானில் சிறுபான்மை ஷியா பிரிவினருக்கு எதிராக இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு ஏற்கெனவே பல தாக்குதல்களை நடத்தியுள்ளது நினைவுகூரத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.