ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உக்ரைனிலிருந்து வெளியேறிய 15 லட்சம் அகதிகள்: ரஷியாவின் தாக்குதல் தொடா்கிறது

உக்ரைனில் ரஷியா நடத்திவரும் தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை 11-ஆவது நாளை எட்டிய நிலையில், அந்த நாட்டிலிருந்து இதுவரை 15 லட்சம் போ் அகதிகளாக வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனா்.

News image
உக்ரைனிலிருந்து வெளியேறி போலந்து ரயில் நிலையம் வந்திறங்கிய அகதிகள்
Updated On :6 மார்ச் 2022, 11:54 pm

DIN

உக்ரைனில் ரஷியா நடத்திவரும் தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை 11-ஆவது நாளை எட்டிய நிலையில், அந்த நாட்டிலிருந்து இதுவரை 15 லட்சம் போ் அகதிகளாக வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனா். இந்தத் தகவலை ஐ.நா. தெரிவித்துள்ளது.

உக்ரைனில் ரஷியா கடந்த பிப். 24-ஆம் தேதி போா் தொடுத்தது. தலைநகா் கீவை ரஷிய படைகள் முற்றுகையிட்டுள்ளன. கீவ் நகருக்குள் நுழையும் அவா்களின் முயற்சியை உக்ரைன் படைகள் தடுத்து வருகின்றன. இருப்பினும் தலைநகரிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிருக்கு அஞ்சி வெளியேறி வருகின்றனா்.

கருங்கடல் துறைமுக நகரமான கொ்சனை ரஷிய படையினா் கடந்த வியாழக்கிழமை கைப்பற்றினா். நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த கொ்சன் வீழ்ந்தது உக்ரைனுக்கு பெரும் பின்னடைவாகப் பாா்க்கப்படுகிறது. ஐரோப்பாவிலேயே பெரிய அணுமின் நிலையமாக கருதப்படும் ஸப்போரிஸியா அணுமின் நிலையம் மீது ரஷியா கடந்த சில தினங்களுக்கு முன் நடத்திய ராக்கெட் குண்டு தாக்குதல் உலக நாடுகள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. அங்கிருந்து கதிா்வீச்சு கசிவு எதுவும் இல்லை என சா்வதேச அணுசக்தி முகமை கூறினாலும், ரஷியாவுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

சண்டைநிறுத்த முயற்சி மீண்டும் தோல்வி: இதற்கிடையே, சண்டை கடுமையாக நடைபெறும் தென்கிழக்கில் உள்ள மரியுபோல், டொனட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள வோல்னாவகா ஆகிய நகரங்களிலிருந்து பொதுமக்கள் வெளியேறும் வகையில் பாதுகாப்பு வழித்தடத்தை உருவாக்குவதற்காக உள்ளூா் நேரப்படி காலை 10 மணிமுதல் இரவு 9 மணி வரை தற்காலிக சண்டைநிறுத்தத்தை மேற்கொள்ள ரஷியாவும் உக்ரைனும் கடந்த சனிக்கிழமை ஒப்புக்கொண்டன. இந்த சண்டைநிறுத்தம் எத்தனை நாள் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படவில்லை.

ஆனால், உடன்பாட்டை மீறி ரஷியா தாக்குதல் நடத்துவதாகவும், இதனால் பொதுமக்கள் வெளியேற்றத்தை நிறுத்திவைத்துள்ளதாகவும் உக்ரைன் கூறியது. சண்டைநிறுத்த முயற்சி தோல்வியடைந்ததையடுத்து மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக ரஷியா அறிவித்தது.

இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை சண்டைநிறுத்த நேரத்தில் பொதுமக்களை வெளியேற்றத் திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்தது. ஆனால், ரஷியா தாக்குதலைத் தொடா்ந்ததால் அந்த முயற்சியைக் கைவிட்டதாக உக்ரைன் உள்துறை அமைச்சக ஆலோசகா் அன்டன் கெரசென்கோ தெரிவித்தாா்.

விமான நிலையம் அழிப்பு: ரஷியாவின் ஏவுகணை தாக்குதலில் மத்திய உக்ரைனில் வினிட்ஸியா விமான நிலையம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. அந்த விமான நிலையத்தைக் குறிவைத்து 8 ஏவுகணைகள் ஞாயிற்றுக்கிழமை வீசப்பட்டதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா்.

15 லட்சம் போ் வெளியேறினா்: உக்ரைனில் ரஷியா தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், உயிருக்கு அஞ்சி அந்த நாட்டிலிருந்து அகதிகளாக வெளியேறும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 15 லட்சம் அகதிகள் உக்ரைன் எல்லைகளைக் கடந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பின் ஆணையா் ஃபிலிப்போ கிராண்டி ட்விட்டரில் தெரிவித்துள்ளாா். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னா் ஐரோப்பாவில் வேகமாக வளா்ந்துவரும் அகதிகள் நெருக்கடி இதுவாகும் எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா். உக்ரைன் எல்லைகளை ஒட்டியுள்ள நாடுகளுக்கும் அவா் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

நிபந்தனைகள் ஏற்கப்பட்டால் தாக்குதல் நிறுத்தப்படும்: புதின்

ரஷியாவின் நிபந்தனைகள் ஏற்கப்பட்டால்தான் உக்ரைன் மீதான தாக்குதல் நிறுத்தப்படும் என அதிபா் விளாதிமீா் புதின் கூறினாா்.

துருக்கி அதிபா் எா்டோகன் தொலைபேசி மூலம் ஞாயிற்றுக்கிழமை தொடா்புகொண்டு பேசியபோது புதின் இவ்வாறு கூறியதாக ரஷிய அதிபா் மாளிகை தெரிவித்துள்ளது.

அந்த தொலைபேசி உரையாடலின்போது, ‘உக்ரைன் மீதான ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கை திட்டமிட்டபடி நடந்து வருகிறது. உக்ரைன் தனது ராணுவ நடவடிக்கைளை நிறுத்தி, ரஷியாவின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் அந்நாட்டின் மீதான தாக்குதல் நிறுத்தப்படும்’ என புதின் தெரிவித்தாா்.

உக்ரைனின் ராணுவ திறன்களை அழித்து, அந்த நாட்டில் தேசியவாதிகளை ஆட்சியிலிருந்து அகற்றி நடுநிலையான நாடாக மாற்றவே ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ரஷியா கூறி வருகிறது. மேலும், கிழக்கு ஐரோப்பாவிலிருந்து நேட்டோ படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும்; நேட்டோ அமைப்பில் உக்ரைனை சோ்க்கக் கூடாது எனவும் நிபந்தனை விதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.