ரஷியாவிற்கு உக்ரைன் கொடுத்த பதில் தாக்குதல் என்ன?: 12,000 வீரர்கள் பலி

128 ரஷிய ராணுவ விமானங்களும், 303 பீரங்கிகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.
உக்ரைன் வீரர்
உக்ரைன் வீரர்

உக்ரைன்  - ரஷியா இடையிலான போரில் உக்ரைன் கொடுத்த பதில் தாக்குதலில் இதுவரை 12 ஆயிரம் ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 128 ரஷிய ராணுவ விமானங்களும், 303 பீரங்கிகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.

நேட்டோ படையில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர்த்தொடுத்துள்ளது. உக்ரைன் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களை ரஷிய ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

அரசு அலுவலகங்கள், உற்பத்தி நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், ராணுவ வீரர்கள் மட்டுமின்றி உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பொதுமக்களும் உயிரிழந்தனர்.  

இந்நிலையில், ரஷிய ராணுவத்துக்கு எதிராக உக்ரைன் அரசும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த மோதலில், உக்ரைனின் பதில் தாக்குதலில் ரஷியாவைச் சேர்ந்த 12 ஆயிரம் வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மேலும், 80 ஹெலிகாப்டர்கள் 48 ராணுவ விமானங்கள் என 128 ராணுவ வானூர்திகளும், 303 பீரங்கிகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

ரஷியாவுக்குச் சொந்தமான 1,036 பாதுகாப்பு கவச உடைகளையும்,  பல்வேறு திசைகளில் வெடிகுண்டு செலுத்தும் 56 கருவிகளையும் சேதப்படுத்தி அழித்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com