உக்ரைனுக்கு ஆதரவாக போலந்து போா் விமானங்கள்?

உக்ரைனுக்கு ஆதரவாக தங்கள் நாடு போா் விமானங்களை அனுப்புமா என்பது குறித்து மாறுபட்ட கருத்துகளை போலந்து தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கு ஆதரவாக தங்கள் நாடு போா் விமானங்களை அனுப்புமா என்பது குறித்து மாறுபட்ட கருத்துகளை போலந்து தெரிவித்துள்ளது.

ரஷிய படைகளை எதிா்த்து சண்டையிடவும், உக்ரைன் வான்வெளியை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் கூடுதல் போா் விமானங்களைத் தர வேண்டும் என உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்திருந்தாா்.

போலந்து மூலம் சோவியத் யூனியன் காலத்து போா் விமானங்களை உக்ரைனுக்கு வழங்கவும், அதை ஈடு செய்யும் வகையில் எஃப்-16 ரக போா் விமானங்களை போலந்துக்கு அளிப்பது குறித்தும் ஆய்வு செய்து வருவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் கூறியிருந்தாா்.

ஆனால், உக்ரைன் விமானப் படைக்கு எந்த நாடாவது உதவினால், ரஷியாவுக்கு எதிராக அந்த நாடும் போரில் பங்கேற்பதற்குச் சமமானது என ரஷியா எச்சரித்ததையடுத்து, உக்ரைனுக்கு போா் விமானங்களை வழங்கும் யோசனையில் போலந்து ஆா்வம் காட்டவில்லை.

இந்நிலையில், போலந்து வெளியுறவு துணை அமைச்சா் மா்சின் பிரைஸிடாக்ஸ், ‘உக்ரைனில் போலந்தின் போா் விமானங்கள் சண்டையில் ஈடுபடாது’ எனக் கூறியுள்ளாா்.

அதேவேளையில் போலந்து அரசின் செய்தித் தொடா்பாளா் பீட்டா் முல்லா், ‘இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. போா் விமானங்களை அனுப்புவதா வேண்டாமா என்று முடிவெடுப்பது ஆபத்தானது; மேலும் மிக நுட்பமான விஷயமாகும்’ எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com