தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

புதினுக்கு எதிரான வன்முறை கருத்துகளுக்கு அனுமதி

ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் மற்றும் அந்த நாட்டு ராணுவத்தினரை படுகொலை செய்யத் தூண்டும் பதிவுகளை அனுமதிக்க முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளங்களின் உரிமையாளரான மெட்டா நிறுவனம் முடிவு

News image
Updated On :11 மார்ச் 2022, 7:20 pm

DIN

ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் மற்றும் அந்த நாட்டு ராணுவத்தினரை படுகொலை செய்யத் தூண்டும் பதிவுகளை அனுமதிக்க முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளங்களின் உரிமையாளரான மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பொதுவாக எந்தவொரு நபரையோ அல்லது குழுவையோ படுகொலை செய்யத் தூண்டும் பதிவுகள் முகநூலிலும் இன்ஸ்டாகிராமிலும் அனுமதிக்கப்படுவதில்லை.

ஆனால், உக்ரைனில் ரஷியா படையெடுத்துள்ள சூழலைக் கருத்தில் கொண்டு, ‘ரஷிய வீரா்களைக் கொல்லுங்கள்’ என்பது போன்ற கருத்துகளை தற்காலிகமாக அனுமதிக்கும் வகையில் எங்களது கொள்கையில் மாற்றம் செய்துள்ளோம்.

எனினும், பொதுவான ரஷிய மக்களுக்கு எதிராக இத்தகைய கோஷங்களை எழுப்ப அனுமதிக்கப்படாது. புதிய கொள்கை முடிவுகளின்படி, உக்ரைன், ரஷியா, போலந்து உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்தவா்கள் ரஷிய அதிபா் புதினும் பெலாரஸ் அதிபா் அலெக்ஸாண்டா் லுகஷென்கோவும் கொல்லப்பட வேண்டும் என்ற கருத்தைப் பதிவிட அனுமதிக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ரஷியா, இத்தகைய கொள்கை முடிவுகளின் மூலம் மெட்டா நிறுவனம் தீவிரவாதத்தைத் தூண்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.