அவசரகால நிதி: உக்ரைனுக்கு ரூ.2,600 கோடியை வழங்கியது ஐரோப்பிய ஆணையம்
போரால் பாதிப்புகளைச் சந்தித்து வரும் உக்ரைனுக்கு அவசரகால நிதியாக ரூ.2,600 கோடியை வழங்கியது ஐரோப்பிய ஆணையம்.


போரால் பாதிப்புகளைச் சந்தித்து வரும் உக்ரைனுக்கு அவசரகால நிதியாக ரூ.2,600 கோடியை வழங்கியது ஐரோப்பிய ஆணையம்.
உக்ரைனில் கடந்த பிப்.24 ஆம் தேதி முதல் ரஷியப் படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. போரில் உக்ரைனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றியதுடன் தொடர் தாக்குதலையும் நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே உக்ரைன் அரசு போரைச் சமாளிக்க பல நாடுகளின் உதவியை நாடி வரும் நிலையில் ஐரோப்பிய ஆணையம் அவசரகால நிதியாக உக்ரைனுக்கு ரூ.10,200 கோடியை(1.2 பில்லியன் யூரோ) வழங்க முன் வந்தது.
இந்நிலையில், அவசரகால நிதியின் முதல் தொகையாக ரூ.2,600 கோடியை(300 மில்லியன் யூரோ) ஐரோப்பிய ஆணையம் உக்ரைனுக்கு வழங்கியுள்ளதாக ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | மேற்கு உக்ரைன் நகரங்களையும் குறிவைத்துத் தாக்கும் ரஷிய படைகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...