உலகளவிலான உணவுப் பொருள்களின் விலை உயரக்கூடும்: புதின் எச்சரிக்கை

ரஷிய மீதான பொருளாதாரத் தடைகளால் உலகளவிலான உணவுப் பொருள்களின் விலை உயரக்கூடும் என்று ரஷிய பிரதமர் புதின் எச்சரித்துள்ளார். 
உலகளவிலான உணவுப் பொருள்களின் விலை உயரக்கூடும்: புதின் எச்சரிக்கை


உலகளாவிய உர உற்பத்தி நாடான ரஷியா மீது மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்தினால் உலகளவிலான உணவுப் பொருள்களின் விலைகள் மேலும் உயரக்கூடும் என்று ரஷிய அதிபர் புதின் எச்சரித்துள்ளார். 

உக்ரைன் மீது ரஷியப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பொருளாதார ரீதியான தடைகளை விதித்துள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களும் ரஷியாவுக்கான தங்களது சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.  

இந்நிலையில், ரஷிய மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளால் உலகளவிலான உணவுப் பொருள்களின் விலை உயரக்கூடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிபர் புதின் எச்சரித்துள்ளார். 

இதுதொடர்பாக ரஷிய முக்கிய அரசுத்துறை அதிகாரிகளுடான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய புதின், ரஷியா மீதான பொருளாதார ரீதியான தடைகள் சட்டவிரோதமானது. மேற்கத்திய நாடுகள் தங்கள் மக்களை ஏமாற்றுவதாகவும், பொருளாதாரத் தடையால் ஏற்படும் பிரச்னைகளை ரஷியா அமைதியாக தீர்க்கும்.

ரஷிய உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், உலகளாவிய உர உற்பத்தியாளரான ரஷியா, உலகளாவிய விவசாயச் சந்தைகளுக்கான ஏற்றுமதி சேவையை ரஷியா தொடர்ந்து செய்யும். எரிவாயு வினியோகம் ஒப்பந்தங்களின் அடிப்படையில் தொடர்ந்து வழங்கப்படும் என்றார்.

மேலும் ரஷியா மற்றும் பெலாரஸ் நாடுகளில் இருந்து பெரும்பாலான உரம் மற்றும் வளங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால் விரைவில் உலகளவிலான உணப்பொருள்கள் மற்றும் இறுதிக் கட்ட பணிகளுக்கு தேவையான பொருள்களின் விலை உயரும் என்று புதின் எச்சரித்துள்ளார். 

உக்ரைனில் ரஷியாவின் இரண்டு வாரமாக நடைபெற்றும வரும் தாக்குதலில் ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். போரால் 20 லட்சம் மக்களை நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தியுள்ளது, அவர்களில் அதியளவில் குழந்தைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com