

இன்ஸ்டாகிராம் சேவையை முடக்குவதாக ரஷியா அறிவித்துள்ளது.
உக்ரைனில் தொடர்ந்து 17-வது நாளாக ரஷியப் படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. உக்ரைனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய ரஷியா தற்போது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் ரஷிய ராணுவத்தினருக்கு எதிராக பதிவு செய்யப்படும் வன்முறைக் கருத்துக்களை அனுமதித்த இன்ஸ்டாகிராம் செயலியின் சேவையை முடக்குவதாக ரஷியா அறிவித்துள்ளது.
மார்ச் 14 ஆம் தேதி முதல் ரஷியாவின் சில பகுதிகளில் இந்த முடக்கம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் செயலியின் முக்கிய நிர்வாகியான ஆடம் மோசரி,’ ரஷியாவில் 8 கோடிக்கும் அதிகமானோர் இன்ஸ்டாவைப் பயன்படுத்தி வரும் நிலையில், இந்த முடக்கம் தவறானது’ எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ரஷியா பேஸ்புக் சேவையை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
உழைப்பை அள்ளிக் கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்! - மு.க. ஸ்டாலின்

மதுரை சித்திரைத் திருவிழா!

ரூ. 1000 கோடி முதலீடு... காத்திருக்கும் கேவிஎன் புரடக்ஷன்ஸ்!

இந்திய ஐஃபோன் தொழிற்சாலைகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகின்றனர்!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

