தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

உக்ரைனில் வான்வழித் தாக்குதலைத் தொடங்கும் ரஷியா?

உக்ரைனின் பல பகுதிகளில் எச்சரிக்கை ஒலிகள் ஒலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :12 மார்ச் 2022, 8:06 am

DIN

உக்ரைனின் பல பகுதிகளில் எச்சரிக்கை ஒலிகள் ஒலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனில் தொடர்ந்து 17-வது நாளாக ரஷியப் படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. உக்ரைனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய ரஷியா தற்போது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

குறிப்பாக, தலைநகர் கீவை முழுமையாகக் கைப்பற்ற ரஷியத் தரைப்படைகள் முயன்று வருகின்றன.

இந்நிலையில், உக்ரைன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ரஷியா வான்வழித் தாக்குதலில் ஈடுபடலாம் என்பதால் எச்சரிக்கை ஒலி(சைரன்) ஒலிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, கடந்த வாரம் தலைநகர் கீவில் சைரன் ஒலிக்கத் தொடங்கியதால் மக்கள் பதற்றம் அடைந்த நிலையில் தற்போது எச்சரிக்கை ஒலிகள் ஒலிக்கத் தொடங்கியது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.