எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

உக்ரைன் மேயரைக் கடத்தியது ரஷியப் படை

மெலிடோபோல் நகர மேயரை ரஷிய ராணுவத்தினர் கடத்திச் சென்றதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

News image
மெலிடோபோல் நகர மேயர் இவான் பெடரோ
Updated On :12 மார்ச் 2022, 6:52 am

DIN

மெலிடோபோல் நகர மேயரை ரஷிய ராணுவத்தினர் கடத்திச் சென்றதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைனில் தொடர்ந்து 17-வது நாளாக ரஷியப் படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. உக்ரைனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய ரஷியா தற்போது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

குறிப்பாக, தலைநகர் கீவை முழுமையாகக் கைப்பற்ற ரஷியத் தரைப்படைகள் முயன்று வருகின்றன.

இந்நிலையில், உக்ரைனின் மெலிடோபோல் நகர மேயர் இவான் பெடரோவை ரஷிய ராணுவத்தினர் கடத்தியதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி மற்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய அதிபர் ஸெலென்ஸ்கி ‘மெலிடோபோல் நகரை ரஷிய கைப்பற்றும் முயற்சியைத் தடுத்த அந்நகர மேயர் இவான் பெடரோவை ரஷிய ராணுவத்தினர் 10 பேர் கடத்திச் சென்றுள்ளனர். ரஷியா ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளைப் போல நடந்துகொள்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.